search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லக்குடி மருத்துவ முகாம்"

    கல்லக்குடி அரிமா சங்கம், முருகன் மருத்துவமனை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. #Medicalcamp

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடி பேருராட்சியில் கல்லக்குடி அரிமா சங்கம், முருகன் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தியது.

    முகாமிற்கு கல்லக்குடி அரிமா சங்கம் தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். க ல்லக்குடி முருகன் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் வினோத் குமார் முன்னிலை வகித்தார். கல்லக்குடி அரிமா சங்க வட்டார தலைவர் ஆரோக்கியதாஸ் சாசன தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.

    முகாமில் மருத்துவர்கள் நந்தகுமார், முகிலன், நாகராஜ், குமார், சத்யபிரியா, சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டு மூட்டு மற்றும் எலும்பு முறிவு, பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மகளிர் மற்றும் பொது மருத்துவம், பரிசோதனை ரத்த பரிசோதனை புற்று நோய் மற்றும் இருதயநோய் சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட 525 பேருக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன .

    முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லக்குடி முருகன் மருத்துவமனை மருத்துவர் வினோத்குமார், அரிமா சங்க செயலர் கண்ணன், பொருளாளர் சரவணன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். முகாமில் கல்லக்குடி, வடுகர்பேட்டை, மேலரசூர், மால்வாய், கல்லகம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். #Medicalcamp

    ×